அரசாங்கத்துக்கு வரி செலுத்தாததன் காரணமாக டபிள்யூ.எம். மெண்டிஸ் மற்றும் நிறுவனத்தின் உற்பத்தி உரிமத்தினை கலால் திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது.
இந்த இடைநீக்கமானது இன்று (05) முதல் அமுலுக்கு வரும்.
நிறுவனம் 5.7 பில்லியன் ரூபாவினை வரி மற்றும் மேலதிக கட்டணங்களாக செலுத்த தவறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து வரி மிகுதிகள், மேலதிக கட்டணம் செலுத்தாமல் இருப்பது, எதிர்வரும் டிசம்பர் 31 க்குப் பிறகு நிறுவனத்தின் வைத்திருக்கும் பிற உரிமங்களை இடைநிறுத்துவதற்கு வழிவகுக்கும் என்றும் திணைக்களம் எச்சரித்தது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைகளின் போது இந்த விடயம் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், டபிள்யூ.எம். மெண்டிஸ் & நிறுவனத்தின் 10 மதுபான உற்பத்தி உரிமங்களில் 8 உரிமங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் தெரியவந்தது.