அடுத்த 12 மணி நேரத்தில் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து எதிர்வரும் 12ஆம் திகதி தென்மேற்கு வங்கக்கடலில் தமிழ்நாடு இலங்கை கடலோர பகுதிகளை அடைய கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக இன்று முதல் 12 ம் திகதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 11, 12-ஆகிய தேதிகளில் கடலூா் தொடங்கி ராமநாதபுரம் வரை உள்ள கடலோர மாவட்டங்களிலும்,, புதுச்சேரி, காரைக்காலிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.