யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட ஆவா கும்பலின் தலைவன் என சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அஜந்தன் சுப்ரமணியம் என்று அழைக்கப்படும் 32 வயதான பிரசன்ன நல்லலிங்கம் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் என கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2022 ஆம் ஆண்டு பிரான்ஸில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் இவர், இலங்கையிலும் பல கொலைகளுடன் தொடர்புடையவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், சந்தேகநபரை கைது செய்ய இலங்கையின் பாதுகாப்புப் படையினர் சர்வதேச பிடியாணை பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
2021 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற இவர், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து கனடாவுக்கு வந்த போது கனேடிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக பிரான்சிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கனேடிய பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர்.
பிரசன்ன நல்லலிங்கம் தற்போது காவலில் வைக்கப்பட்டு, நாடு கடத்துவது தொடர்பான முடிவுக்காக காத்திருக்கிறார்.
அவரது விசாரணை 2025 மே மாதம் திட்டமிடப்பட்டுள்ளது.