ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உத்தியோகப்பூர்வ பயணமாக எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த தகவலை இன்று (10) நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
டிசம்பர் 17 ஆம் திகதி வரை இந்தியாவில் தங்கியிருக்கும் ஜனாதிபதி, இந்தியப் பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடனும், மேலும் பல அதிகாரிகளுடனும் சந்திப்புக்களை நடத்தவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் அநுரகுமார திஸாநாயக்க மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.