அடுத்த 5 மாதங்களுக்கு மீனவர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் மானியமாக மாதாந்தம் 9,375 ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்ட விரைவு சிறிய மீன்பிடிப் படகுகளுக்கு இந்த மானியம் வழங்கப்பட உள்ளது.
இன்று (10) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும், அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ இந்த தவலை தெரிவித்தார்.
முன்னர் மீனவர்களுக்கு வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் மானியத்தை இலகுபடுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் இதன்போது கூறினார்.