ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் உறுப்பினர்கள் எதிர்வரும் நாட்களில் சிரியா குறித்த அறிக்கையை வெளியிடுவார்கள் என்று அமெரிக்க மற்றும் ரஷ்ய இராஜதந்திரிகள் திங்களன்று (10) தெரிவித்தனர்.
தலைநகர் டமாஸ்கஸை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியது மற்றும் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தை வெளியேற்றியது குறித்து ஐ.நா.வின் மூடிய கதவு கூட்டத்திற்குப் பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
15 உறுப்பினர்களை கொண்ட கூட்டத்தின் பின்னர் உரையாற்றிய ரஷ்யாவுக்கான ஐ.நா.வின் தூதுவர் வசிலி நெபென்சியா (Vassily Nebenzia),
சிரியாவின் பிராந்திய ஒருமைப்பாடு, ஒற்றுமையைப் பாதுகாப்பது, குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் தேவைப்படும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் விநியோகிப்பதை உறுதிசெய்வது ஆகியவை தொடர்பில் சபை கவனம் செலுத்தியதாக கூறினார்.
ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் துணை தூதர் ரொபர்ட் வூட்டும் (Robert Wood), பெரும்பாலான உறுப்பினர்கள் மேற்கண்ட பிரச்சினைகள் குறித்து பேசியதை உறுதிப்படுத்தினார்.
சந்திப்பின் பின்னர் சிரியாவுக்கான ஐ.நா. தூதர் குஸ்ஸே அல்டாஹாக் (Koussay Aldahhak),
தனது பணி மற்றும் வெளிநாட்டில் உள்ள அனைத்து சிரிய தூதரகங்களும் தங்கள் பணியை தொடரவும், மாற்ற காலத்தில் அரசு நிறுவனத்தை பராமரிக்கவும் அறிவுறுத்தல்களைப் பெற்றுள்ளன. இப்போது நாங்கள் புதிய அரசாங்கத்திற்காக காத்திருக்கிறோம்.
நாங்கள் சிரிய மக்களுடன் இருக்கிறோம். நாங்கள் நாட்டு மக்களைப் பாதுகாப்போம் மற்றும் பணியாற்றுவோம்.
எனவே மறு அறிவிப்பு வரும் வரை நாங்கள் எங்கள் பணியைத் தொடருவோம் என்றார்.
அசாத்தை வெளியேற்றிய கிளர்ச்சியாளர் தாக்குதல் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) ஆல் தொடங்கப்பட்டது.
இது முன்னர் நுஸ்ரா முன்னணி என்று அழைக்கப்பட்டது, 2016 இல் சிரியாவில் அல் கொய்தாவின் அதிகாரப்பூர்வ பிரிவாகவும் இருந்தது.
HTS ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையினால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாக பார்க்கப்படவில்லை.
அமெரிக்கா, பிரித்தானியா, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் இது ஒரு பயங்கரவாதக் குழுவாகக் கருதப்படுகிறது.
இந்த நிலையில் மூடிய கதவுகளுக்கு பின்னாலான ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டன் பின்னர், தடைகள் பட்டியலில் இருந்து HTS ஐ நீக்குவது குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை என்றும் ரஷ்ய மற்றும் அமெரிக்க இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.