கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களுக்கம் ஐக்கிய நாடுகளின் சபையின் மக்கள்தொகை நடவடிக்கைகளுக்கான நிதியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான பிரதிநிதி குன்லே அதெனிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது
இதன்போது கிழக்கு மாகாணத்தில் உள்ள சமூகங்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளுக்கு ஆதரவளிக்க பல்வேறு பங்குதாரர்களுடன் UNFPA இன் தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் பெண்கள் மற்றும் சிறுமிகளது ஆரோக்கியம், பாலின சமத்துவம் மற்றும் காலநிலை மீள்தன்மை போன்ற முக்கிய துறைகளில் கவனம் செலுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது