யாழ்ப்பாணத்தில் பரவி வரும் மர்மமான காய்ச்சலால் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 07 அதிகரித்துள்ளதாக யாழ். வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக இந்த மரணம் நிகழ்ந்ததாக நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் குறிப்பிட்டார்.
உயிரிழந்தவர்கள் 20 வயதுக்கும் 65 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் அவர்.
பொதுவாக எலிக்காய்ச்சல் எனப்படும் லெப்டோஸ்பிரோசிஸ் நோய் என இது சந்தேகிக்கப்படுவதால், அவற்றை உறுதிப்படுத்துவதற்காக இரத்த மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
இதேவேளை, நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சின் தொற்றாநோய் பிரிவின் வைத்தியர் குமுது வீரகோன், நோயின் சரியான தன்மையை கண்டறிய விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.
நோய் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நிலைமையை அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.