தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதாகவும், இது அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையை நோக்கி இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் மெதுவாக நகர்ந்து கரையை அடைய அதிக வாய்ப்புள்ளது. தமிழகத்தின் அடுத்த 24 மணி நேரத்தில், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேற்கு மற்றும் மேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், வட மாகாணத்தில் சில இடங்களில் மி.மீ. 75 வரை பலத்த மழை பெய்யக்கூடும் என்றும், மாலை அல்லது இரவு வேளைகளில் பிற பகுதிகளில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.