சபாநாயகர் அசோக ரன்வலவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இது தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் சபாநாயகர் அசோக ரன்வல தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்திருந்தார்.
தனது கல்வித் தகுதி தொடர்பில் சமூகத்தில் எழுந்துள்ள பிரச்சினை காரணமாக தற்போது அந்தத் தகுதிகளுக்கான ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், தனது கல்வித்தகுதி தொடர்பாக எந்த பொய்யான தகவலையும் தெரிவிக்கவில்லை என அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்