‘பாபர் மசூதி இடிப்பு மற்றும் குஜராத் கலவரம் ஆகிய இரு சம்பவங்களும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மிகப்பெரும் தோல்விகள்’ என திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.சௌகதா ராய் விமர்சித்துள்ளார்.
மக்களவையில் அரசமைப்புச் சட்டத்தின் மீதான விவாதத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன் போது ஹிந்துத்துவவாதிகளால் பாபர் மசூதி இடிக்கப்பட்டதே அரசமைப்புச் சட்டத்தின் மிகப்பெரும் தோல்வியாகும் எனவும், இந்தச் சம்பவத்தால் நாடே தலைகுனியும் நிலை ஏற்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போது பிரதமராக உள்ள மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது அங்கு வெடித்த கலவரமும் அரசமைப்புச் சட்டத்தை கேள்விக்குறியாக்கியது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.