மட்டக்களப்பு, செட்டிபாளையத்தில் அம்பியுலன்ஸ் வண்டியொன்று அரச பேருந்தொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. களுவாஞ்சிகுடி நோக்கிவந்துகொண்டிருந்த அம்பியுலன்ஸ் வண்டியானது கல்முனை நோக்கி சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துசபைக்கு சொந்தமான பேருந்துடன் மோதியபோதே இவ்விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது அம்பியுலன்ஸ் வண்டி சாரதியும் அதில் பயனித்த பொதுச்சுகாதார பரிசோதகர் மற்றும் தாதிய உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காயமடைந்தவர்கள் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.