அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், கனடா தொடர்பாக தெரிவித்த கருத்தானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் ” கனடா தற்பொழுது அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாறிக்கொண்டு வருகின்றது எனவும் 51 வது மாநிலமாக கனடாவை மாற்றுவது சிறந்த யோசனை எனவும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
அத்துடன் கனடாவிற்கு எதற்கு மானியங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும், அனேகமான கனடா மக்கள் அமெரிக்காவின் 51 வது மாநிலமாக கனடா மாறுவதையே விரும்புவதாகவும், அவ்வாறு மாறினால் கனடா மக்கள் பெருமளவு வரியைச் சேமிக்க முடியும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ட்ரம்ப் தெரிவித்த கருத்தானது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளர்.