நாட்டில் முதன் முறையாக லூசியானாவில் வசிக்கும் நபர் ஒருவர் கடுமையான பறவைக் காய்ச்சல் தொற்றினால் பாதிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா புதன்கிழமை (18) அறிவித்தது.
H5N1 பறவைக் காய்ச்சலை எதிர்த்துப் போராடுவதற்காக அமெரிக்காவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான கலிபோர்னியாவில் புதன்கிழமை அவசரகால நிலையை அறிவித்தது.
2024 ஆம் ஆண்டில் முதல் முறையாக கறவை மாடுகளைப் பாதித்த நாட்டின் வைரஸ் தொற்கை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அதிகாரிகள் தவறிவிட்டனர்.
இதனால், கடந்த மாதத்தில் மாத்திரம் அனைத்து கலிபோர்னிய மாநிலத்தின் பால் பண்ணைகளில் 25 சதவீதம் வைரஸ் பரவியது மற்றும் 34 மாநில குடியிருப்பாளர்களை பாதித்தது.
நாட்டின் மிகப்பெரிய பால் உற்பத்தி மாநிலம் முழுவதும் இந்த வைரஸ் பரவியுள்ளது.
கடந்த 30 நாட்களில் மட்டும் 645 பால்பண்ணைகளில் இந்த வைரஸை மாநில விவசாயத் துறை கண்டறிந்துள்ளது.
இதற்கிடையில், வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்ட முதல் நோயாளி அடையாளம் காணப்பட்டதாக மத்திய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, லூசியானாவில் உள்ள ஒருவர் பறவைக் காய்ச்சல் தொற்று காரணமாக கடுமையான சுவாச அறிகுறிகளுடன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
65 வயதிற்கு மேற்பட்ட மற்றும் அடிப்படை மருத்துவ பிரச்சனைகளைக் கொண்ட நபர், கொல்லைப்புற பண்ணையில் நோய்வாய்ப்பட்ட மற்றும் இறந்த பறவைகளுடன் நெருக்கமாக பணியாற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மார்ச் மாதத்தில் இருந்து, அமெரிக்காவில் 60 க்கும் மேற்பட்ட பறவைக் காய்ச்சல் நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. ஆனால் முந்தைய நோய்கள் சாதாரணமானவையாக பார்க்கப்பட்டது.
இதற்கிடையில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள வைத்திய நிபுணர்கள்,
மக்களில் வைரஸ் தொடர்பில் தெளிவாக இல்லை, நோய்வாய்ப்பட்ட அல்லது இறந்த பறவைகளுடன் தொடர்பு கொள்ளும் போதும், கோழிகளைக் கையாளும் போது சுவாசம் மற்றும் கண் பாதுகாப்பு மற்றும் கையுறைகளை அணிவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தினர்.