அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் பரிசுத்தபாப்பரசர் பிரான்ஸிஸை சந்திக்கவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜோபைடனின் பதவிக்காலம் நிறைவடைவடைவதற்கு ஒரு மாத காலம் மாத்திரம் உள்ள நிலையில் ஜனவரி முதல்வாரத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது
இந்த சந்திப்பு நிமித்தம் ஜனாதிபதி ஜோபைடன் ஜனவரி 9 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இத்தாலி செல்லவுள்ளார் எனவும் இதன்போது இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியை சந்தித்து கலந்துரையாடவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ரோம் நகரில் பரிசுத்த பாப்பரசரை சந்திக்கவுள்ளார் எனவும், இச் சந்திப்பின் போது உலகம் முழுவதும் அமைதியை பேணுதல் தொடர்பாகவும் உலகம் எதிர்கொண்டுள்ள முக்கிய சவால்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.