விதை உருளைக்கிழங்கு, உரம் ஆகியவற்றின் விலை அதிகரிப்பு காரணமாக பயிர்ச்செய்கையினை மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்களைத் தாம் எதிர்கொண்டுள்ளதாக வெலிமடை மற்றும் ஊவா பரணகம பிரதேச விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் உருளைக்கிழங்கு செய்கையில் பரவி வரும் நோய்த் தொற்று காரணமாகப் பயிர்கள் அழியும் அபாயம் உள்ளதாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில் தமது நிலையைக் கருத்தில் கொண்டு தமக்கு உர மானியம் வழங்குமாறும் விவசாயிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.