பிரேசிலின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கிராமடோ நகரில் (Gramado) நகரில் ஒரு சிறிய தனியார் விமானமொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
விமானத்தை இயக்கி வந்த பிரேசிலிய தொழிலதிபர் லூயிஸ் கிளாடியோ கலியாசி, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் ஏனைய குடும்ப உறுப்பினர்கள் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரேசிலின் தேசிய குடிமைத் தற்காப்புப் பிரிவின் கூற்றுப்படி, ஞாயிற்றுக்கிழமை (22) காலை விமானம் புறப்பட்ட சில நிமிடங்களுக்குப் பின்னர் விபத்து ஏற்பட்டுள்ளது.
விமானம் கட்டிடம் ஒன்றின் புகைக்கூண்டு மீது மோதியது, பின்னர் ஒரு குடியிருப்புடனும், இறுதியாக ஒரு தளபாட வணிக நிலையம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியதாக குறிப்பிடப்படுகிறது.
இந்த விபத்தில் தரையில் இருந்த 17 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கிராமடோ அமைந்துள்ள பிராந்தியமான ரியோ கிராண்டே டோ சுல் க்கான சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
விபத்தினால் சேதமடைந்த கட்டிடங்களின் குப்பைகளுக்கு மத்தியில் அவசரகால பணியாளர்கள் மீட்பு நடபடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.
கிராமடோ ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகும், இது பண்டிகை காலங்களில் விசேட நிகழ்வுகளை நடத்துவதற்கு புகழ் பெற்றது.
இப்பகுதி இந்த ஆண்டு மே மாதம் முன்னோடியில்லாத வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதில் பலர் உயிரிழந்தனர் மற்றும் 150,000 மக்களை அவர்களின் வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.