அனுராதபுரம் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள தண்டவாளத்தில் செல்ஃபி எடுக்க முற்பட்ட தாய் மற்றும் அவரது மகள் ரயிலுடன் மோதுண்டு உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (22) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிவேக ரயிலுடன் மோதுண்டே இவர்கள் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 38 வயதான தாயும் அவரது 18 வயது மகளும் ஆவர்.
இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த இவர்கள் அனுராதபுரத்தில் அமைந்துள்ள பொது விளையாட்டாரங்கில் நடைபெறும் போட்டி ஒன்றில் பங்கெடுப்பதற்காக வருகை தந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.