விரதங்களிலேயே மிகவும் புண்ணிய பலன்களை தரும் விரதமாக கருதப்படுவது ஏகாதசி விரதமாகும்.
பெருமாளுக்கு மிகவும் விருப்பமான ஏகாதசி விரதத்தை எவர் ஒருவர் தவறாமல் கடைபிடிக்கிறாரோ அவருக்கும் பெருமாளின் அருளுடன் வைகுண்ட பதவியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஏகாதசி தினத்தன்று உணவு, தண்ணீர் ஆகியவற்றை தவிர்த்து முழு நாளும் பெருமாளின் மந்திரங்களை உச்சரித்து, வழிபட்டு, ஏகாதசிக்க மறுநாள் துவாதசி அன்று நான்கில் மூன்று பங்கு நேரம் கழிந்த பிறகு பாரணை செய்து, விரதத்தை நிறைவு செய்வதால் பெருமாளின் திருவடிகளை அடைய முடியும் என்பது நம்பிக்கை.
மாதத்திற்கு இரண்டு முறை என வருடத்திற்கு 24 அல்லது 25 ஏகாதசி விரத நாட்கள் வரும்.
ஒவ்வொரு ஏகாதசிக்கும் தனித்தனி பெயரும், தனித்தனி சிறப்பும், பலனும் உள்ளது.
வருடத்தில் வரும் 24 ஏகாதசிகளில் விரதம் இருக்க முடியாவிட்டாலும் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் ஏகாதசி அன்று மட்டும் விரதம் இருந்தாலே அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்த பலன்கள் கிட்டும்.
2025 ஆம் ஆண்டில் ஒவ்வொரு மாதமும் எந்தெந்த தினங்களில் ஏகாதசி விரதம் வருகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
2025 ஏகாதசி விரத நாட்கள் :