2024 செப்டம்பரில் 0.2 சதவீத அதிகரிப்பை தொடர்ந்து, கடந்த ஒக்டோபர் மாதம் கனடாவின் பொருளாதாரம் 0.3 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக அந் நாட்டு புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.
சுரங்கம், குவாரி, எண்ணெய் மற்றும் எரிவாயு பிரித்தெடுத்தல் துறையில் பலம் பெற்றதன் மூலம் ஒக்டோபர் மாதத்தில் பொருளாதாரம் வளர்ச்சி கண்டது.
சுரங்கம், குவாரி, எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பது ஒக்டோபரில் 2.4 சதவீதம் உயர்ந்தது, இவற்றில் எண்ணெய் மற்றும் எரிவாயு பிரித்தெடுத்தல் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியது இது 3.1 சதவீதம் அதிகரிப்பாகும்.
அது தவிர, சேவைகள் உற்பத்தி செய்யும் தொழில்கள் மாதத்திற்கு 0.1 சதவிகிதம் வளர்ச்சியடைந்ததால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டதாக புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இது வருடத்தில் ஐந்தாவது மாத பொருளாதார அதிகரிப்பு ஆகும்.