யுத்தத்தில் உயிரிழந்த போர் வீரர்கள் மற்றும் அங்கவீனமுற்ற படைவீரர்களின் குடும்பங்களின் நலன்கள் குறித்து நிவர்த்தி செய்யும் குழுவின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் அவரது அலுவலகத்தில் நேற்று (27) நடைபெற்றது.
இதன்போது யுத்தத்தில் உயிரிழந்த வீரர்கள் மற்றும் ஊனமுற்ற படைவீரர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான சவால்களை அடையாளம் காண்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முறையான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தையும், பூர்த்தி செய்யப்படாத தேவைகளுக்கு விரைவான மற்றும் பயனுள்ள தீர்வுகளை உறுதி செய்வதையும் குழு வலியுறுத்தியது.
முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில், பிரதி அமைச்சரின் பணிப்புரையின் கீழ், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக பாதுகாப்புச் செயலாளர் இந்தக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.