நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாம்புரி பகுதியில் மின்சாரம் தாக்கி புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நான்கு பேரில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (29) மாலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்கள் 16, 22 மற்றும் 29 வயதுடைய புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
மாம்புரி பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திருவிழா மண்டப கட்டிடத்தின் ஊழியர்கள் குழுவொன்று இரும்பு பலாஞ்சி ஒன்றின் மீது ஏறி கட்டிட வேலை செய்து கொண்டிருந்தனர்.
இதன்போது, மின்சாரம் பாய்ந்த மின் சார வயர் பலாஞ்சியுடன் தொடர்பு கொண்டதால் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுரைச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.