கஜகஸ்தானில் அஜர்பைஜான் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதற்கு ரஷ்யாவிடம் நஷ்டஈடு வழங்குமாறு அஜர்பைஜான் ஜனாதிபதி இலம் அலியேவ் கோரியுள்ளார்.
விபத்தில் காயமடைந்த பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கும், விபத்தால் சேதமடைந்த நிலத்திற்கும் ரஷ்யா இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அத்துடன் இதற்கு காரணமானவர்கள் அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்
இதேவேளை கடந்த புதன்கிழமை, கஜகஸ்தானில் அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 38 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது