மஸ்கெலியா பகுதியில் ட்ரக் வண்டியொன்று வீதியை விட்டு விலகி குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (30) காலை 11.35 மணியளவில் நல்லதண்ணி மஸ்கெலியா பிரதான வீதியில் புரவுன்லோ தோட்ட முத்துமாரியம்மன் ஆலய பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர்.
ராகலை பகுதியில் இருந்து சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்து தரிசனம் முடித்து விட்டு திரும்புகையில் இவ் விபத்து ஏற்பட்டு உள்ளது.
ட்ரக் வண்டியில் பயணித்த மூன்று சிறார்கள் மற்றும் பெண் ஒருவர் ஆண் ஒருவர் காயமடைந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
விபத்து குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு அதிகாரி விசாரணை நடத்தி வருகின்றனர்.