பிரித்தாணியாவில் வருடா வருடம் மிக கோலாகலமாக புத்தாண்டு கொண்டாடப்படுவது வழக்கமாக இடம்பெற்று வருகின்றது
அந்த வகையில் பிரித்தாணியா மேயர், தலைநகரின் அதிகாரப்பூர்வ புத்தாண்டு வானவேடிக்கை நிகழ்வுக்கு முன்னதாக மோசடி செய்பவர்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுத்தியுள்ளார்.
சவுத் பேங்க் மற்றும் விக்டோரியா அணையைச் (South Bank and Victoria Embankment) சுற்றி நடக்கும் புகழ்பெற்ற வருடாந்த காட்சிக்கான அனுமதி சீட்டுக்கள் ஒக்டோபரில் விற்பனைக்கு வந்துவிட்டதாக சாதிக் கான் (Sadiq Khan) கூறியுள்ளார்
இந் நிலையில் “டிக்கெட் மாஸ்டர்” மட்டுமே மறுவிற்பனை டிக்கெட்டுகளை வாங்குவதற்கான ஒரே இடம் எனவும் இணையத்தில் அல்லது ஆஃப்லைனில் அனுமதி சீட்டுக்கள் விற்பதாகக் கூறி மோசடி செய்பவர்களைக் கவனத்தில் கொள்ளுங்கள் எனவும் உங்களிடம் அனுமதி சீட்டுக்கள் இருந்தால், உங்களை உறுதிபடுத்திகொள்ளுங்கள் என்றும் சாதிக் கான் X இல் பதிவிட்டுள்ளார்.
இந் நிலையில் “லண்டன் நகரின் மையப்பகுதிக்கு வரத் திட்டமிடும் எவரும், அணைக்கட்டில் (Embankment) உள்ள முக்கிய வானவேடிக்கைக் காட்சியானது முழு சீட்டுகள் அனைத்தும் முடிவடைந்து விட்டதை என்பதை அறிந்திருக்க வேண்டும்.” என்பதை அவர் மேலும் கூறினார்.
அத்துடன் சமீபத்திய ஆண்டுகளில் சிறு குழுவினர் சட்டவிரோதமாக நுழைவுச் சீட்டுகளை பெற்று நிகழ்வுகளுக்குள் நுழைய முயற்சிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை நாங்கள் கண்டுள்ளோம் எனவும், இது அனைவரின் பாதுகாப்பையும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது என்று அவர் கூறினார்.
மேலும் புத்தாண்டு தினத்தன்று இந்த வழியில் நுழைய முயற்சிக்கும் எவரும் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்