ஹொலிவூட் நட்சத்திரங்களான ஏஞ்சலினா ஜோலி மற்றும் பிராட் பிட் ஆகியோர் விவாகரத்து தீர்வை எட்டியுள்ளனர்.
ஹொலிவூட் வரலாற்றில் மிக நீண்ட மற்றும் மிகவும் சர்ச்சைக்குரிய விவாகரத்துக்களில் ஒன்றுக்கான தீர்வினை ஜோலியின் சட்டத்தரணி ஜேம்ஸ் சைமன், தி அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் உறுதிப்படுத்தினார்.
நீதிமன்ற ஆவணங்கள் எதுவும் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை. மேலும் ஒரு நீதிபதி விவாகரத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.
49 வயதான ஜோலி மற்றும் 61 வயதான பிட் ஹொலிவூட்டின் மிக முக்கியமான ஜோடிகளில் ஒன்றாக 12 ஆண்டுகளாக இருந்தனர்.
2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட, இவர்களுக்கு ஆறு குழந்தைகள் உள்ளன.
ஜோலி, 2016 இல் “சமரசம் செய்ய முடியாத வேறுபாடுகளை” காரணம் காட்டி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார்.
இருவரும் இணைந்து தங்கள் ஆறு குழந்தைகளின் பொருளாதார செலவுகளை பகிர்ந்து வருவதானால் விவாகரத்து கடந்த எட்டு ஆண்டுகளாக தொடர்ந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.