நெல்சனில் அமைந்துள்ள சாக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் இன்று (02) நடைபெற்று முடிந்த நியூஸிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 07 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரினை நியூஸிலாந்து 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
மூன்றாவது டி20 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு 218 ஓட்டங்களை குவித்தது.
இலங்கை அணி சார்பில் அதிகபடியாக குசல் ஜனித் பெரேரா 46 பந்துகளில் 101 ஓட்டங்களையும், அணித் தலைவர் சரித அசலங்க 46 ஓட்டங்களையும் எடுத்தனர்.
219 ஓட்டம் என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணியானது 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்புக்கு 211 ஓட்டங்களை பெற்றது.
இதனால், இலங்கை அணியானது 07 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
நியூஸிலாந்து அணி சார்பில் அதிகபடியாக ரச்சீன் ரவீந்திரா 39 பந்துகளில் 69 ஓட்டங்களை எடுத்தார்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் அதிகபடியாக சரித அசலங்க 3 விக்கெட்டுகளையும், வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியானது ஜனவரி 05 ஆம் திகதி வெலிங்டனில் ஆரம்பமாகும்.