புத்தாண்டு தினத்தன்று அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர், தனது டிரக் வாகனத்தில் இஸ்லாமிய அரசுக் (ஐஎஸ்ஐஎஸ்) கொடியை பறக்கவிட்டபடி நியூ ஆர்லியன்ஸின் நெரிசலான பகுதியில் தாக்குதலை நடத்தியுள்ளார்.
அமெரிக்க நகரத்தின் மிகவும் சுறுசுறுப்பான சுற்றுலாப் பகுதிகளில் ஒன்றான பிரெஞ்சு காலனியின் மையத்தில் உள்ள போர்பன் தெருவில் புதன்கிழமை (01) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும், 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது எதிர்பாராத விதமாக நிகழ்ந்த விபத்து அல்ல என்று விபரித்துள்ள அமெரிக்க புலனாய்வுப் பிரிவு (FBI) அது ஒரு பயங்கரவாதச் செயல் என்று கூறியுள்ளது.
மக்கள் கூட்டத்தின் மீது டிரக் வாகன் மோதி விபத்தை ஏற்படுத்தியதை அடுத்து, அதனை செலுத்திய சாரதி தடுப்பி ஓட முயற்சித்த போது சட்ட அமுலாக்கத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்.
இதனால், இரண்டு அதிகாரிகள் காயமடைந்தனர்.
மேலும், சட்ட அமுலக்கா அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டினால் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதையடுத்து ஆரம்பக் கட்ட விசாரணைகளை மேற்கொண்ட புலனாய்வாளர்கள், சந்தேக நபர் 42 வயதான அமெரிக்க குடிமகன் என்றும், அண்டை மாநிலமான டெக்சாஸைச் சேர்ந்த ஷம்சுத்-தின் ஜப்பார் என்ற இராணுவ வீரர் என்றும் அடையாளம் கண்டு கொண்டனர்.
இந்த நிலையில், புத்தாண்டு தினத்தில் 15 பேரைக் கொன்ற நியூ ஆர்லியன்ஸ் தாக்குதலில் சந்தேக நபர் தனியாக செயல்படவில்லை என்று அமெரிக்க புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.
அவர் ஓட்டிச் சென்ற வாகனத்தில் ஒரு இஸ்லாமிய அரசுக் குழுவின் கொடியும், அருகிலேயே இரண்டு மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் புலனாய்வாளர்கள் குறிப்பிட்டனர்.