அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் ஒரே நேர்கோட்டில், ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கின்றன.
அன்றைய தினத்தன்று , நம்முடைய முன்னோர்கள், விண்ணிலிருந்து, மண்ணிற்கு வருகிறார்கள்.
நம்மை ஆசீர்வதிக்கிறார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது.
எனவே, அமாவாசை தினத்தில் சில காரியங்களை துவங்குவது நன்மையாகவே கருதப்படுகிறது.
குறிப்பாக, அமாவாசை தினத்தில் பிறக்கும் குழந்தைகள் அபார மூளையுடன் இருக்குமாம்.
இந்நாளில் சூரியனும் சந்திரனும் ஒன்று சோ்வதால் ஒரு காந்த சக்தி உருவாகிறது.. எனவே, பிறக்கும் குழந்தைகளின் மூளையும், பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும் என்று விஞ்ஞான ரீதியாக நிரூபணமாகியிருக்கிறது.
ஆனால், அமாவாசையன்று விபத்துகளும் அதிகமாக நடப்பதாக ரஷ்ய விஞ்ஞானிகள் ஆய்வு செய்து கூறியிருக்கிறார்கள்.
தர்ப்பணம்:
முன்னோர்கள், பித்ருக்கள் இந்த ஒருநாளில் மட்டுமே வீட்டிற்கு வருவதால், முறையாக வழிபட வேண்டும்.
அதனால்தான் அன்றைய நாளில், முன்னோர்களை தவிர இந்த நாளில் வேறு யாரையும் வணங்க கூடாது, எண்ணெய் தேய்க்கக்கூடாது என்பார்கள்.
அதிலும், வெள்ளிக் கிழமையில் அமாவாசை வந்தால், பித்ரு பூஜை முடிந்த பிறகுதான், வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டுமாம்.
எனவே நல்ல காரியங்கள் எதுவானாலும், அமாவாசையில் பித்ரு பூஜை முடித்த பிறகு செய்வதால், கூடுதல் பலன் கிடைக்குமாம்.
அமாவாசையன்று முன்னோர்களுக்குச் செய்யும் தர்ப்பணம் முடியும் வரை வீட்டு வாசலில் கோலம் போடுதல், பூஜை செய்தல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
அதுமட்டுமல்ல, அமாவாசை தோறும், ஒவ்வொரு வீட்டு வாசலிலும், முன்னோர்கள் நின்று கொண்டு எள் தண்ணீர் பெறுவதற்காக காத்துக் கொண்டிருப்பார்களாம்.
அதனால்தான் அன்றைய தினம் விரதம் இருப்பவர்கள் வாசலில் கோலம் போடக்கூடாது என்கிறார்கள்.
கர்மவினைகள்:
முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து உணவு படையலிட்டு அவர்களின் ஆசி பெறும்போது, திருமணத்தடை, குழந்தை பிறப்பு தாமதம், வறுமை, நீடித்த நோய், கடன் தொல்லை போன்ற பிரச்சினைகளை நீக்கி கர்மவினைகளுக்கு பரிகாரம் தேடிக் கொள்ளலாம்.
நம் பித்ருக்கள் சக்தி நிறைந்தவர்கள் என்பதால், அவர்களது ஆசீர்வாதம் கிடைப்பதால் புண்ணியமும் செல்வமும் பெருகும்.
எனவே, காலை 6.30 மணிக்குள் தர்ப்பணம் கொடுப்பது நல்லது. அப்படி முடியாதபட்சத்தில் சூரியன் மறைவதற்குள் தர்ப்பணம் கொடுக்கலாம்.
விரதம்:
அமாவாசை தினத்தில் பெற்றோர் இல்லாத கணவன் விரதமிருக்கலாம்.
கணவன் விரதம் இருக்கிறாரே, என்பதற்காக மனைவியும் விரதம் இருக்கக் கூடாது. சுமங்கலிகள் ஒருபோதும் அமாவாசை நாளில் விரதம் இருக்கக் கூடாது.
அதேபோல, அமாவாசை விரத நாளில் சமைக்கும்போது, வெறும் வயிற்றுடன் பெண்கள் சமைக்கக்கூடாது, காலை உணவை சாப்பிட்ட பிறகுதான் சமைக்க வேண்டுமாம்.
அதேபோல, அமாவாசை நாளில், விரதம் மேற்கொண்டு, மதியம் இலையில் சாப்பிடவேண்டும். காகத்துக்கு உணவு வைத்த பிறகே சாப்பிட வேண்டும்.