நாட்டில் பாடசாலைக் கல்வியை நவீனமயப்படுத்தும் நோக்கில் உலக வங்கியின் அனுசரணையுடன் செயற்படுத்தப்படும் வேலைத்திட்டத்தின் கீழ் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஹரினி அமரசூரிய ஈர்க்கப்பட்டுள்ளார்.
மேலும் அண்மையில் கல்வி அமைச்சில் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இந் நிலையில் மாணவர்களின் சுகாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் இடைநிலைக் கல்விக்கான தகவல் தொழில்நுட்பப் பாடத்திட்டத்தை மேம்படுத்துதல் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.