கஸகஸ்தான் நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் திடீரென ஏற்பட்ட பனிப்புயல் காரணமாக 100 வாகனங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலவும் சீரற்ற வானிலை மற்றும் திடீரென ஏற்பட்ட பனிப்புயல் காரணமாக நிலைகுலைந்த வாகன சாரதிகள், வாகனங்களை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் இவ்வாறு விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பனிப்புயலினால் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.