கடைகளில் கிடைக்கும் மஞ்சள் பொடியைப் பயன்படுத்துவதை விடவும் பச்சை மஞ்சளாக வாங்கி வீட்டிலேயே உலர வைத்து பொடி செய்து வைத்துக் கொள்வதால் அதிலுள்ள குர்குமின் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் சிதையாமல் முழுமையாகக் கிடைக்கும். அதேபோல தான் இஞ்சியும் ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கிறது. இவையிரண்டும் சேரும்போது உடலில் கீழ்வரும் மாற்றங்கள் ஏற்படும்.
தினமும் காலையில் மஞ்சள் மற்றும் இஞ்சியைச் சேர்த்து உட்கொள்வதன் மூலம், உடலில் ஏற்படும் வீக்கத்தை எதிர்த்துப் போராடுவது, செரிமான ஆற்றலை மேம்படுத்துவதற்கு, மூட்டு வலியைக் குறைக்க, புற்றுநோய் எதிர்ப்புத் திறன்களைக் கொண்டிருப்பது, நினைவாற்றலை மேம்படுத்தவும், குடல் இயக்கத்தை மேம்படுத்தவும், இயற்கையான இரத்த சுத்திகரிப்பதாகவும் இருக்கிறது.
மஞ்சளில் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடுகிற, அழிக்கிற ஆற்றல் கொண்ட இரசாயனங்கள் ஏராளமாக உள்ளன. இந்த பொருட்களை குர்குமினாய்டுகள் என்று குறிப்பிடுகிறோம்.
அதேபோல இஞ்சியில் ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டி பாக்டீரியல், ஆன்டி வைரல் பண்புகள் நிறைந்து இருக்கின்றன. அவற்றிற்கு உள்ளுறுப்புகளில் ஏற்படும் இன்ஃபிளமேஷன் மற்றும் அழற்சிகளை எதிர்த்துப் போராடும் தன்மையைக் கொண்டிருக்கிறது.
தேவையான பொருள்கள்
மஞ்சள் கிழங்கு – 1 இன்ச் அளவு,
இஞ்சி – 1 இன்ச் அளவு,
எலுமிச்சை சாறு – அரை ஸ்பூன்,
மிளகு – 5,
தண்ணீர் – கால் டம்ளர்,
செய்முறை
மஞ்சள், இஞ்சி ஆகிய இரண்டின் தோலையும் சீவிவிட்டு நன்கு கழுவி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். இதை நன்றாக அரைத்து எலுமிச்சை சாறு, நசுக்கிய மிளகு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து ஒரு வடிகட்டி அல்லது சுத்தமான வெள்ளைத் துணியில் வைத்து நன்கு வடிகட்டி எடுத்தால் ஜீஸ் ரெடி.
இந்த இஞ்சி – மஞ்சள் ஷாட்ஸை தினமும் காலை வெறும் வயிற்றில் 20-30 மில்லி அளவு வரை குடித்து வரலாம்.
இதன் மூலம், மூட்டு வலி குறையும். தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளும்போது ஆர்த்தரைடிஸ் குணமாக்கும் ஆற்றலும் உண்டு.
இந்த மஞ்சள் – இஞ்சி ஷாட்ஸ் தினமும் 30 மில்லி அளவு எடுத்துக் கொள்ளும்போது குடலின் இயக்கம் பலமடங்கு மேம்படும்.
வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைச் சரிசெய்யவும் ஜீரணக் கோளாறுகளை மேம்படுத்தவும் உதவி செய்கிறது.
இந்த இஞ்சியும் மஞ்சளும் சேரும்போது பித்தப்பையில் பித்தநீர் உற்பத்தியைத் தூண்டி ஜீரணத்தை தூண்டும் என்சைம்களைத் தூண்டுகிறது. இதனால் வயிறு உப்பசம், தொப்பை உள்ளிட்ட பிரச்சினைகளைச் சரிசெய்யும்.