லாஸ் ஏஞ்சல்ஸைச் புதன்கிழமை (08) சூழ்ந்த காட்டுத் தீயானது குறைந்தது 5 பேரின் உயிரை காவு கொண்டதுடன், நூற்றுக்கணக்கான வீடுகளை அழித்தது, 100,000 க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றவும் கட்டாயப்படுத்தியது.
இதனிடையே, தீ விபத்தினை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு விரார்களும், விமானப் படையினரும் போராடி வருகின்றனர்.
சூறாவளி காற்று தீயை அணைக்கும் நடவடிக்கைகளுக்கு இடையூறாக அமைந்ததுடன், இதன் தாக்கம் காரணமாக செவ்வாய்க்கிழமை (07) ஆரம்பித்த தீயானது வேகமாக பரவியது.
தற்போது தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல ஹொலிவுட் நட்சத்திரங்கள் வசிக்கும் லாஸ் ஏஞ்சல்ஸின் அழகிய புறநகர்ப் பகுதியான பசுபிக் பாலிசேட்ஸ் சுற்றுப்புறத்தில் புதன்கிழமை தீ வேகமாக பரவியது.
தீப்பரவலினால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் ஏற்கனவே அழிக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஜனாதிபதி ஜோ பைடன், ஒரு பெரிய பேரழிவு அறிவிப்புக்கு புதன்கிழமை ஒப்புதல் அளித்தார் மற்றும் கலிபோர்னிய ஆளுநர் கவின் நியூசோம் அவசரகால நிலையை அறிவித்தார்.
எனெனில், புதன்கிழமை இரவு முழுவதும் காற்று குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் வியாழன் வரை நிலைமை மோசமாக இருக்கும் என்று முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்தனர்.
ஒரேகான், நியூ மெக்சிகோ மற்றும் வாஷிங்டன் மாநிலத்தைச் சேர்ந்த குழுவினர் உட்பட கிட்டத்தட்ட 5,000 வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் உள்ளதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், கலிபோர்னியா தீயை எதிர்த்துப் போராடுவதற்கு பாதுகாப்புத் துறை கூடுதல் ஆதாரங்களை வழங்குகிறது என்று பைடன் அறிவித்தார்.
இதில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் கடற்படை ஹெலிகொப்டர் நீர் விநியோக வாளிகள் அடங்கும்.