மலையக மக்களுக்கான வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும், இல்லாவிட்டால் வீதியில் போராடத் தயங்கமாட்டோம் என்று தொழிலாளர் தேசிய சங்கத் தலைவர் திகாம்பரம் எச்சரித்துள்ளார்.
மேலும் 18.01.2025 அன்று அட்டனில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் அவர் ஊடகங்களுக்கு இதை தெரிவித்தார்.
அரசாங்கம் அரிசி, தேங்காய், எரிபொருள் மற்றும் மின்சார விலைகளை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்ததுடன், மலையக மக்களுக்கு காணி உரிமை மற்றும் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
“வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிடில் மக்கள் ஆதரவை இழப்பீர்கள். போராட்டங்களுக்குத் தயார்,” என்று அவர் எச்சரித்தார்.