நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்றைய தினம் (20) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநரின் அறிவிப்பின் பிரகாரம் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த நாட்களில் கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பரீட்சைகள் நடைபெறுவதால், இன்று நடைபெறவிருந்த பரீட்சை பாடங்கள் அதற்கு பதிலாக எதிர்வரும் 25 ஆம் திகதி அதாவது சனிக்கிழமை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், வட மத்திய மாகாண ஆளுநரின் பணிப்புரையின் பிரகாரம் குறித்த மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பிரதேச கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.