கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலையால் மக்கள் இருப்பிடங்களிற்குள் வெள்ளநீர் உட்புகுந்ததுடன் உள்ளக போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டதுள்ளது
அத்துடன் அதிகாலை பெய்த பலத்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதுடன் இரணமடு குளம் வான்பாய்ந்து வருவதுடன், குளத்தின் சகல வான்கதவுகவும் திறக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் வடிந்தோடும் நிலையில் கண்டாவளை, கோரக்கன்கட்டு, முரசுமோட்டை, ஊரியான் உள்ளிட்ட தாழ்நிலப்பகுதியில் உள்ள மக்களை அவதானமாக செயற்படுமாறும், குளங்களை பார்வையிடும் மக்கள் அவதானமாக செயற்படுமாறும் இடர் முகாமைத்துவப் பிரிவு அறிவுறுத்தி வருகின்றது.
மேலும் சீரற்ற வானிலையால் சரிந்து விழுந்த மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை பாதுகாப்பாக அகற்றி போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் அரச மரக்கூட்டுத்தாபானத்தினர் விரைந்து செயற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது