கிளீன் ஸ்ரீலங்கா வெற்றிகரமான திட்டம் என்றும் அதன் ஊடாக அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழரசுக் கட்சி எம்.பி. சத்தியலிங்கம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்
அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துவோம் என்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டே நாம் அனைவரும் நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளோம் என்பதை சபையில் சுட்டிக்காட்டிய அவர், அந்த அரசியலமைப்பில் காணப்படும் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பான இரண்டாவது நாள் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க, அது தொடர்பில் உரிய வகையில் ஆராய்ந்து தீர்வினை வழங்குவதாகத் தெரிவித்தார்