பல மாதங்களாக விண்வெளி ஆர்வலர்கள் பூமியின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்ட பூமியின் இரண்டாவது சந்திரன் என்று செல்லமாக குறிப்பிடப்பட்ட சிறிய சிறுகோள் தொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ளனர்.
இந்த சிறுகோள் நம் சொந்த சந்திரனின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் என்று அவர்கள் கணித்துள்ளனர்.
பூமிக்கு அருகில் உள்ள பொருள் 2024 PT5 சிறுகோளானது 2024 செப்டம்பரில் பூமியின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டது.
சுமார் 33 அடி (10 மீட்டர்) அகலம் கொண்ட இந்த சிறுகோள் பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தவில்லை.
ஆனால், நமது கிரகத்துடன் இணைந்து சூரியனின் சுற்றுப் பாதையை சுற்றி வலம் வந்தது.
இந்த நிலையில், வானியல் ஆய்வாளர்களின் ஒரு புதிய ஆய்வு சிறுகோளின் உள்ளூர் தோற்றத்தைப் பற்றி வெளிப்படுத்தியுள்ளது.
இந்த சிறுகோள் சந்திரனின் மேற்பரப்பில் இருந்து ஒரு பகுதி பாறை உடைந்த பெரிய தாக்கத்திற்குப் பின்னர் அதிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கலாம் என தெரிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
“மினி-நிலா” என்று அழைக்கப்படும் இந்த சிறுகோள், 2024 ஆகஸ்ட் 7 அன்று நாசாவின் சிறுகோள் டெரஸ்ட்ரியல்-இம்பாக்ட் லாஸ்ட் அலர்ட் சிஸ்டம் (ATLAS) மூலம் முதன்முதலில் கண்டறியப்பட்டது.