இந்த வருடத்தின் முதல் 3 வாரங்களில் நாட்டில் 3,649 டெங்கு நோய்யாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த முதல் 3 வாரங்களில் 2 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளதுடன் அந்த இறப்பு மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளது
இதேவேளை கொழும்பு மாவட்டத்தில் இருந்து 491 நோயாளிகளும், கம்பஹா மாவட்டத்தில் இருந்து 558 நோயாளிகளும், களுத்துறை மாவட்டத்தில் இருந்து 95 நோயாளிகளும் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் நாடு முழுவதும் 22 அதிக ஆபத்துள்ள டெங்கு சுகாதார அதிகாரி பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது