உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளமையினால் தனக்கு பாதுகாப்பையும் வாகனத்தையும் ஒதுக்கித் தருமாறு யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், தனக்கு எதிராக 24 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் எதுவுமே தனிப்பட்ட சம்பவங்கள் தொடர்பானவை அல்ல என்றார்.
நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களை சுட்டிக்காட்டிய அவர், வடக்கிற்குச் செல்வதற்கும் திரும்புவதற்கும் தனக்குப் பாதுகாப்பு மற்றும் வாகனம் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
தனக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு அரசாங்கம் பொறுப்பேற்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜே.வி.பி.யின் கடந்த காலத்தை குறிப்பிட்ட அவர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஒரு கொலைகார அரசாங்கம் என்றும் சாடிப் பேசினார்.