அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக வீசிவரும் பனிப்புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்வடைந்துள்ளது.
அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக பனிப்புயல் வீசி வருகின்றது. குறிப்பாக டெக்சாஸ், லூசியானா, மிசிசிப்பி, அலபாமா, ஜார்ஜியா, தென் கரோலினா மற்றும் புளோரிடா மாகாணங்களின் பல பகுதிகளில் 10 அங்குலம் அளவிலான பனிப்பொழி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 62 ஆண்டுகளில் இல்லாத வகையில், பனிப்புயல் பாதிப்பால் 2,100-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும்,அடர்பனியால் டெக்சாஸ் மற்றும் ஜார்ஜியா மற்றும் மில்வாகீ, புளோரிடா உள்ளிட்ட அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நான்கு மாநிலங்களில் 1,20, 000க்கும் மேற்பட்டோருக்கு மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், கடுமையான பனிப்பொழிவால் வீதி மற்றும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.