இன்று இடம்பெறவுள்ள ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை சூப்பர் 6 சுற்றில் இந்தியா – பங்களாதேஷ் அணிகள் பலப்பரீட்டை நடத்தவுள்ளன.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான 2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் மலேசியாவில் நடைபெற்று வருகின்றது.
இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த அணிகள் வீதம் 12 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறின. 12 அணிகளும் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி குழு 1-ல் இந்தியா, அவுஸ்திரேலியா, இலங்கை,வங்காளதேசம், ஸ்கொட்லாந்து, வெஸ்ட்இண்டீஸ் அணிகளும், குழு 2-ல் தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்து, அமெரிக்கா, நைஜீரியா, அயர்லாந்து, நியூசிலாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்த சுற்றில் ஒரு அணி தங்கள் பிரிவில் உள்ள குறிப்பிட்ட இரு அணிகளுடன் மட்டும் மோதும். இந்த சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் -2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும் சூப்பர் 6 சுற்றுப் போட்டிகள் நேற்று ஆரம்பமாகின.
இந்நிலையில் நடப்பு சம்பியன் ஆன இந்திய அணி தனது முதலாவது சூப்பர் 6 சுற்று போட்டியில் பங்களாதேஷை இன்று எதிர்கொள்ளவுள்ளது.கோலாலம்பூரில் இலங்கை நேரப்படி பகல் 12 மணியளவில் இப் போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.