மின்சார தூண் உடைந்து விழுந்ததில் மின்சார சபையின் மூன்று ஊழியர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொனராகலை, செவனகல பகுதியில் இந்த சம்வபம் இடம்பெற்றுள்ளதுடன் மின்சார சபையின் மூன்று ஊழியர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமானதால் எம்பிபிட்டிய மாவட்ட வைத்தியசாலையில் இருந்து கராபிட்டிய தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த ஊழியர்கள் மின்சார தூண்களை பொருத்திக் கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.