19 வயதுக்குட்பட்ட மகளீருக்கான ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதி வாய்ப்பினை இலங்கை அணி இழந்துள்ளது.
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றுவரும் இரண்டாவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் மோசமாக காலநிலை காரணமாக அரையிறுதி வாய்ப்பினை இலங்கை அணி இழந்துள்ளது.
முதலாம் குழுவுக்கான சுப்பர் சிக்ஸ் போட்டி நேற்று சீரற்ற காலநிலையால் இடைநிறுத்தப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒருபுள்ளிகள் வழங்கப்பட்டன.
இலங்கை தற்போது 3 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தில் இருக்கிறது. ஸ்கொட்லாந்து ஒரு புள்ளியுடன் 6ஆம் இடத்தில் இருக்கிறது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சனிக்கிழமை நடைபெற்ற சுப்ப சிக்ஸ் போட்டியில் 7 விக்கெட்களால் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றது.
இந்நிலையில் நடப்புச் சம்பியனான அவுஸ்திரேலியாவும் இந்தியாவும் அரை இறுதிகளில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.