நாடளாவிய ரீதியில் பிடியானை பிறப்பிக்கப்பட்டிருந்த 4ஆயிரத்து 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”குற்றத் தடுப்பு பிரிவினரால் விசேட சோதனை நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றது. குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 249 பேரை கைது செய்துள்ளோம். மேலும் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 4,020 பேரையும் கைது செய்துள்ளோம்.
கடந்த நாட்களில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 84 பேரை கைது செய்துள்ளோம்.
அதேநேரம் ரி56 ரக துப்பாக்கிகளும் மூன்று 5 கைத்துப்பாக்கிகளையும் மீட்டுள்ளோம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.