வவுனியா, மகாறம்பைக்குளத்தில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் குறித்த தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி திருத்தப்பணிகளை முன்னெடுத்த போது நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார் எனவும், இதனையடுத்து அவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவத்தில் அனுராதபுரம், நிக்கவரெட்டி பகுதியை சேர்ந்த 30 வயதுடைய சத்துரங்க ஹேரத் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார் எனவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தடவியல் பொலிஸாரின் உதவியுடன் வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.