பிரபாஸ் நடிப்பில் அதிக செலவில் உருவாகி வரும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “கண்ணப்பா” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று (03) வெளியாகியுள்ளது.
முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் பிரபாஸ் ருத்ரா என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
நடிகர் விஷ்ணு மஞ்சு இப்படத்தில் கண்ணப்பர் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்து கடவுளான சிவனை வழிப்படும் தீவிர பக்தனான கண்ணபரை பற்றிய கதையாகும் இது.
இப்படத்தில் இந்திய திரையுலகில் உள்ள பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
மது ,சரத்குமார், ப்ரீத்தி முகுந்தன், ராகுல் ராமகிருஷணா, பிரம்மானந்தம், மோகன் பாபு, மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இதுமட்டும்மல்லாமல் மோகன்லால், பிரபாஸ், அக்ஷய் குமார் மற்றும் காஜல் அகர்வால் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளனர்.
இத் திரைப்படும் திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி தமிழ் , தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் , கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரு பேன் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது.
திரைப்படம் பாரம்பரிய புராணக் கதையுடன் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கலந்து பிரமிக்க வைக்கும் காட்சியை உருவாக்கும் வகையில் உருவாக்கப்படுகிறது.