உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பாக மேலும் பல மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிடுவதற்கு அசாத் மௌலானா தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வருடம் செனல் 4 அலைவரிசைக்கு தகவல்களை வழங்கிய அசாத் மௌலானா என்றழைக்கப்படும் மொஹமட் மஹிலார் மொஹமட் ஹன்ஸீர். மேலும் பல தகவல்களை வழங்க தயாராகவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அசாத் மௌலானா நாடு திரும்புவது தொடர்பில் உறுதியான தீர்மானம் எதனையும் இதுவரை எடுக்கவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அசாத் மௌலானா அரசியல் தஞ்சம் கோரி வெளிநாட்டில் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அசாத் மௌலானா, சுயவிருப்பின் பேரில் நாடு திரும்பி தாமாக முன்வந்து உயிர்த்த ஞாயிறு விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராகவிருப்பதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியின் உண்மையான குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதாக தேசிய மக்கள் சக்தி கடந்த தேர்தல் பிரசாரத்தின் போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.