மத்தள சர்வதேச விமான நிலையத்தால் வருடாந்தம் 3.2 பில்லியன் ரூபாய் நட்டத்தை தொடர்ச்சியாக எதிர்நோக்குவதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரித்துள்ளது.
மத்தள விமான நிலையத்தின் ஊடாக வருடாந்தம் 100,000 பயணிகள் மாத்திரமே வருகை தருவதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ருவான் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு அந்த எண்ணிக்கையை 200,000 அதிகரிக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மத்தள விமான நிலையத்தைச் சுற்றியுள்ள 17 கிலோமீற்றர் நீளமான பாதுகாப்பு வேலியும் பாவனைக்கு உகந்த நிலையில் இல்லை எனவும் குறித்த விமான நிலையத்தை நவீனமயமாக்கவும் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், மத்தள சர்வதேச விமான நிலையத்தால் வருடாந்தம் 3.2 பில்லியன் ரூபாய் நட்டத்தை தொடர்ச்சியாக எதிர்நோக்குவதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ருவான் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.
இந்த நட்டத்தைக் குறைப்பதற்கான திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவம் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தவகையில், மத்தள விமான நிலையத்திற்கு வருகின்ற விமானங்களுக்கு தரையிறங்கும் கட்டணத்திலிருந்து விலக்களிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த தீர்மானத்தின் ஊடாக 6 விமான நிறுவனங்கள் மத்தள விமான நிலையத்தில் தமது விமானங்களை தரையிறக்க இணக்கம் வெளியிட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.