77 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தினுள் பல்வேறு மரக்கன்றுகள் நடும் வைபவம் இன்று நடைபெற்றது.
அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்திற்கான புதிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசாரின் ஆலோசக்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி எம். றம்ஸீன் பக்கீர் வழிநடத்தலில் கல்முனை தலைமையக பொலிஸ் ஆலோசனை குழுவின் பொதுச் செயலாளர் எம்.ஐ .எம் ஜிப்ரி(எல்.எல்.பி) உள்ளிட்டோர் முன்னெடுத்திருந்தனர்.
இதன் போது கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய வளாகத்தில் பெறுமதியான பல்வேறு மரங்கள் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது சமூகப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ.வாஹிட் ,சுற்றுச் சூழல் பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான சிவநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.